இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தனஞ்சய டி சில்வா டெஸ்ட் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே ஒருநாள் மற்றும் T20 அணிகளுக்கு தலைமை தாங்கி வரும் குசல் மெண்டிஸ், எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தனது முதல் டெஸ்ட் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
