உக்ரைனின் பல நகரங்களை இலக்காகக் கொண்டு ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு பதிலடியாக ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி நிலையங்களை உக்ரைன் இலக்காகக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் தொடர்ந்து நான்காவது ஆண்டை கடந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச அளவில் அழுத்தங்கள் தொடர்கின்றன.
