கெப்பித்திகொல்லாவயிலிருந்து தியத்தலாவை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் விமானப்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தியத்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (9) அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்தில் விமானப்படையின் பயிற்சிப் பாடசாலையில் கடமையாற்றிய ஸ்குவாட்ரன் லீடர் (squadron leader) என்கிற பொறுப்பில் இயங்கிவந்த அதிகாரியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கெப்பித்திகொல்லாவ பகுதியிலிருந்து – தியத்தலாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் குறித்த அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகக் கூறும் தியத்தலாவை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
