இலங்கையின் பாடசாலை மற்றும் உயர்கல்வித் துறைகளில் புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், புதிய பாடத்திட்டம், மாணவர் மதிப்பீட்டு முறைமை மற்றும் கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பான திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டன.
பாடசாலைகளில் டிஜிட்டல் கல்வியை மேம்படுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 96 பில்லியன் ரூபா செலவிலான திட்டத்துக்கு கொள்கை ரீதியான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், உயர்தரப் பரீட்சையை நிறைவு செய்யும் மாணவர்கள் பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியல் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு ஒரே இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் முறைமை 2028ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இணையப் பாதுகாப்பு, ஆசிரியர் ஆட்சேர்ப்பு, மாணவர் ஊட்டச்சத்து மற்றும் தொழிற்கல்வியில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
