சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அக்டோபர் 10ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அக்டோபர் 11ஆம் திகதியும் விமான நிலையத்தின் முனையப் பகுதியில் அடையாளம் காணப்படாத ஏவுகணை அல்லது வெடிபொருள் தாக்கியதாகவும், அருகே வந்த குரூஸ் ஏவுகணை வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பாதுகாப்பு நிலைமை மற்றும் செயல்பாட்டு மதிப்பீடுகளைக் கருத்தில் கொண்டு, ரியாத்துக்கான அனைத்து விமான சேவைகளையும் அக்டோபர் 18ஆம் திகதி வரை இடைநிறுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவுக்குப் பயணிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகள் தங்களது விமான நிலையை சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்
