சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் வருடாந்தக் கூட்டங்களில், மத்திய கிழக்கில் நீடிக்கும் போர், எரிசக்தி விலை உயர்வு மற்றும் அதிகரித்து வரும் அரசாங்கக் கடன் ஆகியவை முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டங்களில், எரிபொருள் மற்றும் உர விலைகளின் அதிகரிப்பு உலகப் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்த வேண்டிய அழுத்தம் ஆகியவை வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்குச் சவால்களை ஏற்படுத்தலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதன் விளைவுகள் எரிபொருள், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளிலும் பிரதிபலிக்கக்கூடும்
