ஐபிஎல் 2026 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று 50 போட்டிகளைக் கடந்துள்ள போதிலும், அனைத்து அணிகளையும் ஒரு பாரிய சிக்கல் நிலவி வருகின்றது.
வீரர்களின் காயம், தனிப்பட்ட காரணங்கள் மற்றும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக பல முன்னணி வீரர்கள் தொடரிலிருந்து விலகியுள்ளதால், அணிகள் சுமார் 57.6 கோடி ரூபாய்க்கும் அதிகமான நட்டத்தை எதிர்கொண்டுள்ளன.
அதன்படி, இம்முறை ஏலத்தில் அதிக பணத்துடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, மதீஷ பத்திரணவை 18 கோடி ரூபாய்க்கு வாங்கியது. எனினும், உடற்தகுதி காரணங்களால் அவர் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. மேலும், வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
அத்துடன், சிஎஸ்கே அணியிலிருந்து பாரிய வர்த்தக உடன்படிக்கை மூலம் ராஜஸ்தான் ரோயல்ஸ் இணைக்கப்பட்ட சாம் கரன், காயம் காரணமாக விலகியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
இந்த நிலையில் கலீல் அகமது, நாதன் எல்லிஸ் மற்றும் இளம் வீரர் ஆயுஷ் மத்ரே போன்ற பந்துவீச்சாளர்களின் விலகல் சென்னை அணியின் பந்துவீச்சு வரிசையைப் பலவீனப்படுத்தியுள்ளது.
டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் பென் டக்கெட் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக தொடரிலிருந்து விலகியுள்ளார். மிட்செல் ஸ்டார்க் ஆரம்பப் போட்டிகளில் விளையாடவில்லை.
மேலும், மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மா காயத்தால் சில போட்டிகளைத் தவறவிட்டதோடு, மிட்செல் சான்ட்னர் தோள்பட்டை காயம் காரணமாக தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார்.
குறிப்பாக, கொல்கத்தா அணியால் 9.2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான், இந்தியா – பங்களாதேஷ் இடையிலான அரசியல் பதற்றங்கள் காரணமாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
2026 ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய வீரர்களின் பட்டியல் மற்றும் ஏலத் தொகை:
மதீஷ பத்திரண 18 கோடி
முஸ்தபிசுர் ரஹ்மான் 9.2 கோடி
கலீல் அகமது 4.8 கோடி
ஹர்ஷித் ரானா 4 கோடி
சாம் கரன் 2.4 கோடி
வனிந்து ஹசரங்க 2 கோடி
மிட்செல் சான்ட்னர் 2 கோடி
பென் டக்கெட் 2 கோடி
தொடர்ச்சியான போட்டிகள் மற்றும் பணிச்சுமை மேலாண்மை காரணமாக அவுஸ்திரேலிய வீரர்களான கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரின் பங்களிப்பும் இம்முறை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
