பனாமாவில் நேற்று (ஒக்டோபர் 9) ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) ஆரம்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மையப்பகுதி பிட்டலோசா அரிபா (Pitaloza Arriba) பகுதிக்கு அருகில் அமைந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி நண்பகல் 12.56 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பல பகுதிகளில் உணரப்பட்டன. நிலநடுக்கத்தின் ஆழம் சுமார் 33 கிலோமீற்றராகப் பதிவாகியுள்ளது.
