சவூதி அரேபியாவின் தம்மாம் சர்வதேச விமான நிலையத்துக்கான விமான சேவையை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இன்று (12) திங்கட்கிழமை இரத்து செய்துள்ளது.
இன்று திட்டமிடப்பட்டிருந்த குறித்த விமான சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை (13) செவ்வாய்க்கிழமை தம்மாம் விமான நிலையத்துக்கான விமான சேவைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படுமா என்பது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தம்மாம் நோக்கிப் பயணிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகள், தங்களது விமானப் பயணம் தொடர்பான மேலதிக தகவல்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் ஊடாக உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
