களுத்துறையில் பொலிஸாரினால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 75 லீற்றர் (100 போத்தல்கள்) கசிப்புடன் ஒருவர் நேற்று(12) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் நாகொட பகுதியில் உள்ள வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் வெனிவெல்கெட்டிய பகுதியைச் சேர்ந்த 24 இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
