பமுனுகம பொலிஸாரினால் பமுனுகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், கசிப்பு தயாரிக்கப் பயன்படும் 2079 லீற்றர் கோடா (11 பேரல்கள்) மற்றும் 02 செப்புச் சுருள்களுடன் பெருமளவிலான பொருட்கள் நேற்று மாலை (12) கைப்பற்றப்பட்டுள்ளன.
பமுனுகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு இணங்கவே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சோதனையின் போது சந்தேக நபர் தப்பித்துள்ள நிலையில் குறித்த நபரை கைது செய்ய போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
