மெக்சிகோவின் பசிபிக் கடற்கரைப் பகுதிகளில் ஹரிக்கேன் சைமன் மற்றும் வெப்பமண்டலப் புயல் ரேச்சல் காரணமாகக் கடுமையான வானிலை நிலவுகிறது. இந்தப் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளில் ஐவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் உட்கட்டமைப்புப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட இடங்களில் சிக்கியுள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காக மீட்புப் பணியாளர்கள் ஹெலிகொப்டர்கள் உள்ளிட்ட வசதிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
