Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யால தேசிய பூங்காவின் இரண்டு வலயங்கள் ஒக்டோபர் 16ஆம் திகதி மீண்டும் திறப்பு

அக்டோபர் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வறட்சியான காலநிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த யால தேசிய பூங்காவின் முதலாம் மற்றும் இரண்டாம் வலயங்கள் எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்படவுள்ளன.

வனவிலங்குகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, கடந்த செப்டெம்பர் 14ஆம் திகதி இந்த வலயங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. நிலவிய கடுமையான வறட்சியால் விலங்குகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதுடன், பூங்காவின் வீதிகளைப் பழுதுபார்த்து பராமரிக்கும் பணிகளையும் மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் சுற்றுலாப் பயணிகள் பூங்காவிற்குச் சென்று வனவிலங்குகளைப் பார்வையிட முடியும். மேலும், பூங்காவிற்குள் அமைந்துள்ள வனவிலங்கு விடுதிகள் மற்றும் முகாம்களுக்கான முன்பதிவுகள் நவம்பர் 1ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யால தேசிய பூங்கா இலங்கையின் முக்கியமான வனவிலங்கு சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். குறிப்பாகச் சிறுத்தைகள், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளைப் பார்வையிடுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையை வந்தடைந்தது இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்!

மே 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான பயனாளி கர்தினால் மாத்திரமே – உதய கம்மன்பில

ஜூன் 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

செப்டம்பர் 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நுளம்புகளை அழிக்க பயன்படுத்தும் புகையினால் சுற்றுச்சூழல் பாதிப்பு!

ஜூன் 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube