2026ஆம் ஆண்டில் நீர் கட்டண அதிகரிப்பு எதுவும் இடம்பெறாது என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டி, குண்டசாலைப் பகுதியில் நீர் தட்டுப்பாட்டுக்குத் தீர்வு காணும் நோக்கில், பலகொல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவை அதிகரிக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
சுமார் 2 பில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் குண்டசாலை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு தொடர்ச்சியாக நீரை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர் கட்டணம் தொடர்பான அடுத்தகட்ட மீளாய்வு 2027 ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னரே இடம்பெறும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அபிவிருத்திப் பணிகளுக்கு 2,000 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
