மன்னார் பகுதியில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மேற்கொண்ட சோதனையில், சுகாதாரமற்ற நிலையில் இயங்கிய உணவகம் ஒன்றில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
உணவுப் பொருட்களில் ஈக்கள் காணப்பட்டமை, சுகாதாரமற்ற குளிர்சாதனப் பெட்டிகளில் உணவுகளைச் சேமித்தல், கழிவுநீரை முறையற்ற வகையில் வெளியேற்றுதல் உள்ளிட்ட குறைபாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.
குறித்த உணவகத்திற்கு எதிராக இதற்கு முன்னரும் சுகாதாரக் குறைபாடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
