‘ஜெயிலர் 2’ படத்திலிருந்து மோகன்லால் காட்சிகள் நீக்கம்?
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் தொடர்பில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
படத்தில் மோகன்லாலின் காட்சிகள் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளரும் ஸ்டைலிஸ்ட்டுமான ஜிஷாத் ஷம்சுதீன் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், “அடுத்த பாகத்தில் நான் இருக்க மாட்டேன்” என அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பான அவரது பதிவைத் தொடர்ந்து, மோகன்லால் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இதனால் ‘ஜெயிலர் 2’ தொடர்பான விவாதம் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
