Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் 100mm பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும்

அக்டோபர் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (16) இடியுடன் கூடிய 100 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாக கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வட மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடக்கு , வடமேல் மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி , மாத்தறை, திருகோணமலை மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

நீர்கொழும்பு தொடக்கம் புத்தளம், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் அடிக்கடி ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்திற்கு 60 – 70 km வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 50% சுங்கவரி!

மே 16, 2026
இலங்கை

அதிக விலைக்கு அரிசி ,குடிநீர் போத்தல்களை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை

ஏப்ரல் 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கெஸ்பேவையில் 204 மி.மீ அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு

மே 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

22ஆவது திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம்

செப்டம்பர் 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube