வெள்ளவத்தை ஹம்டென் லேன் வீதியில் பெரிய நீர்வடிகால் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இதனால் சில வாரங்களுக்கு வீதியின் ஒரு பக்கம் மட்டுமே பயன்படுத்த கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆகவே காலி வீதி மற்றும் மரைன் ட்ரைவ் வீதிகளை உங்கள் போக்குவரத்து தேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தினால் ஹம்டென் லேனில் ஏற்படும் வாகன நெரிசலை ஓரளவு குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
குறிப்பாக பாடசாலை மற்றும் அலுவலக நேரங்களில் மிகவும் பாரிய வாகன நெரிசல் இங்கு காணப்படுவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
