Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரியாத் மற்றும் தம்மாமுக்கான விமான சேவை தொடர்ந்தும் இடைநிறுத்தம்

#Riyadh #Dammam #FlightSuspension #FlightDisruption #SaudiArabia #SaudiAirlines #AirportUpdate #TravelAlert #ரியாத் #தம்மாம் #விமானசேவை #விமானசேவைஇடைநிறுத்தம் #சவூதிஅரேபியா #செய்திகள்

அக்டோபர் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சவூதி அரேபியாவின் தம்மாம் மற்றும் ரியாத் ஆகிய நகரங்களுக்கான அனைத்து விமானச் சேவைகளையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை தொடர்ந்தும் இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புச் சூழ்நிலை காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த நிறுவனம், பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பே தமது முதன்மையான முன்னுரிமை எனக் குறிப்பிட்டுள்ளது.

வணிக ரீதியிலான விமானச் சேவைகளை முன்னெடுப்பதற்குச் சாதகமான சூழல் நிலவுவது உறுதி செய்யப்பட்ட பின்னரே, மீண்டும் விமானச் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு, இலங்கையிலுள்ள பயணிகள் 1979 என்ற தொலைபேசி இலக்கத்துடனும், வெளிநாட்டிலுள்ள பயணிகள் +94 11 777 1979 என்ற இலக்கத்துடனும் அல்லது வட்ஸ்அப் (WhatsApp) ஊடாக +94 74 444 1979 என்ற இலக்கத்துடனும் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

முதல் காலாண்டில் 70.4 பில்லியன் வருமானம் – மதுவரி திணைக்களத்தின் சாதனை!

ஏப்ரல் 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி!

ஜூன் 8, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஏமன் அதிபர் மாளிகை மீது ஹவுதி ஏவுகணைத் தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு, 16 பேர் காயம்!

அக்டோபர் 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்வெட்டுக்கு இனி அவசியமில்லை!

ஜூலை 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube