தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி மக்கள் முன்னெடுத்துவரும் தொடர் போராட்டம், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது இன்று (16) 26ஆவது வாரமாகத் தொடர்ந்தது.
தமது பூர்வீக நிலங்களை மீளப் பெற்றுக்கொள்வதற்காகத் தொடர்ந்து போராடிவரும் மக்கள், நீண்டகாலமாக முன்வைத்து வரும் கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
பல வாரங்களாகப் போராட்டம் தொடர்ந்தும், தமது காணிகளை மீளப் பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கைக்கு இதுவரை தீர்வு கிடைக்காத நிலையில், மக்கள் தமது எதிர்ப்பையும் கோரிக்கையையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விரைவில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் வருகையின்போது, தமது போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் மயிலிட்டி மக்கள் காத்திருக்கின்றனர்.
