மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 5வது மற்றும் இறுதி ரி20 போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐதராபாத்தில் நடைபெற்ற 4வது ரி20 போட்டியின்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் இறுதி போட்டியில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இந்திய அணியில் இணைந்துள்ளார்.
இதற்கிடையே, ஐதராபாத்தில் நடைபெற்ற 4வது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது.
இதேவேளை, இரு அணிகளுக்கும் இடையிலான இறுதி ரி20 போட்டி நாளை பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும்.
ஷாய் ஹோப் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி,இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
லக்னோவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஞ்சியில் நடைபெற்ற 2வது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்தூரில் நடந்த 3வது போட்டியில் இந்தியா 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
