Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் புலம்பெயர் தமிழர்களுக்கும் அமைப்புகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – ஈரோஸ் தலைவர் கோரிக்கை

அக்டோபர் 18, 2026
படிக்க 2 நிமிடங்கள்

(கனகராஜா சரவணன்)

1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் சரத்துக்களின் அடிப்படையில், புலம்பெயர் நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள சில தமிழ் நபர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதுடன், அவர்கள் மீதான தடைகளை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் இந்திய அரசாங்கமும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரோஸ் கட்சியின் ஊடக மாநாடு மட்டக்களப்பிலுள்ள வொய்ஸ் ஒப் மீடியா நிறுவனத்தில் நேற்று சனிக்கிழமை (17) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தின் விளைவாகவே வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் மாகாண சபை ஆட்சி முறைமை உருவாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

மாகாண சபை முறைமையை ஏற்படுத்துவதற்கான அரசியல் முன்னெடுப்புகளின் பின்னணியில், தமிழ் மக்கள் உயிரிழப்புகள், சொத்திழப்புகள் உள்ளிட்ட விலைமதிப்பற்ற தியாகங்களைச் செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதுடன், ஆயுதம் ஏந்திய தமிழ் இயக்கங்கள் தொடர்பிலும் பொது மன்னிப்பு வழங்கும் ஏற்பாடுகள் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.

அவ்வாறான நிலையில், தற்போதும் புலம்பெயர் நாடுகளில் வாழும் சில தமிழ் நபர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் தடை செய்யப்பட்ட பட்டியல்களில் உள்ளமை குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

இந்தத் தடைகள் காரணமாக, புலம்பெயர் தமிழர்களிடமிருந்து இலங்கைக்கு வரக்கூடிய முதலீடுகள் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் குறைவதாகவும் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.

புலம்பெயர் நாடுகளில் கணிசமான நிதி வளங்களையும் முதலீட்டுத் திறனையும் கொண்ட பலர் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களின் முதலீடுகள் இலங்கைக்கு வருமானால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள நகரங்கள், கிராமங்களின் அபிவிருத்திக்கும் பங்களிப்புச் செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.

இதனடிப்படையில், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளை மீளாய்வு செய்து, புலம்பெயர் நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள தமிழ் நபர்கள் மற்றும் அமைப்புகள் தொடர்பில் உரிய தீர்வொன்றை எட்டுவது காலத்தின் தேவையாகும் என அவர் வலியுறுத்தினார்.

இந்த விடயத்தில் இந்திய அரசாங்கம் பாராமுகமாக இருக்கக்கூடாது எனவும், குறித்த ஒப்பந்தம் தொடர்பான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இரு நாடுகளும் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தற்போதைய இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனத் தெரிவித்த அவர், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் அமைப்புகள் மீதான தடைகளை நீக்குவது தொடர்பில் இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுக்கு மகஜர் ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

அதிகரிக்கும் வெப்பநிலை!

ஆகஸ்ட் 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரங்க திஸாநாயக்கவின் மிரட்டலே கபில சந்திரசேனவின் மரணத்துக்கு காரணம் – சரத் வீரசேகர!

மே 11, 2026
இலங்கைஎங்கள் ஊர்

ஹொரணையில் திண்பண்ட உற்பத்தி நிலையம் முற்றுகை!

ஜூன் 9, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

சூர்யவன்ஷி சச்சின், கோலியைவிட உயரம் எட்டுவார்: ஸ்டெயின்

ஜூன் 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube