Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தலைக்கவசம் இன்றி ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்த 4 பெண்கள் கைது!

Motor Bike | Ladies | Puttala | Police | SriLanka | QuickTamilNews

வைகாசி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மோட்டார் சைக்கிள் ஒன்றில் தலைக்கவசம் அணியாமல் ஆபத்தான முறையில் 4 பெண்கள் பயணிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, அது தொடர்பில் விசாரணை நடத்திய புத்தள பொலிஸார் நான்கு பெண்களைக் கைது செய்துள்ளனர்.

இந்த காணொளி பொதுமக்களிடையே பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

வைரலான காணொளி காட்சிகளைக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பெண், அதில் பயணித்த இருவர் மற்றும் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் என நால்வர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொலம்பகே ஆர, ஹிதிகிவுல மற்றும் உனவட்டுன ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திய 23 வயதுடைய யுவதியிடம் செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரம் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர் மீது செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை, மோட்டார் சைக்கிளில் ஒருவருக்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்றமை, தலைக்கவசம் இன்றிப் பயணித்தமை, பொது வீதியில் ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சாரதி அனுமதி பத்திரம் இல்லாத ஒருவருக்குத் தனது மோட்டார் சைக்கிளை வழங்கியமைக்காக அதன் உரிமையாளருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் உரிமையாளரும் இன்று (11) திங்கட்கிழமை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

பதவியை விடுகிறார் ஷம்மி சில்வா?

சித்திரை 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் உயிர்மாய்ப்பு செய்துகொள்ள முயற்சி!

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அத்தனகலு ஓயா வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலம் நீடிப்பு!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

சித்திரை 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube