அரசாங்கம் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டு வருவதாகவும், தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்வதாகவும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
அரசியல் இலாபத்திற்கான விமர்சனங்களுக்கு முன்னுரிமை வழங்காமல், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதுளையில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், பாடசாலை மாணவர்களுக்கான நிதியுதவி, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, பல்கலைக்கழக மாணவர்களின் மஹாபொல கொடுப்பனவு உயர்வு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசாங்கத்தின் ஐந்தாண்டு காலப்பகுதி நிறைவடையும் போது நாட்டைச் சிறந்த முன்மாதிரி நாடாக மாற்றுவதே இலக்கு என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
