இந்தியா – சிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நேற்று (18) ராய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றது.
103 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து இலக்கை எட்டியது.
இந்திய அணியின் வெற்றிக்கு ஷபாலி வெர்மா 55 ஓட்டங்களையும், அணித்தலைவி ஸ்மிருதி மந்தனா ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களையும் பெற்று வலுச்சேர்த்தனர்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் இந்திய மகளிர் அணி 2–0 என முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. தொடரின் மூன்றாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது.
