Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி அக்குரணையில் கோர விபத்து; நால்வர் பலி, நால்வர் காயம்!

அக்டோபர் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கண்டி, அக்குரணை பகுதியில் இடம்பெற்ற பல வாகனங்கள் தொடர்பான கோர வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

அக்குரணை குருகொட ஏழாம் மைல்கல் பகுதிக்கு அருகில், சீமெந்து கலக்கும் பாரவூர்தி ஒன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அக்குரணை வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்த தகவலின்படி, விபத்தில் காயமடைந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்தின் தாக்கத்தால் பல வாகனங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், கண்டி – மாத்தளை பிரதான வீதியிலும் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் பொலிஸார், அவசரகால சேவையினர் மற்றும் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் குறித்த வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்தி, அப்பகுதியில் பயணிக்கும்போது அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நவம்பர் 01 முதல் TIN இலக்கம் கட்டாயம்

செப்டம்பர் 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை!

அக்டோபர் 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலிஸ் திணைக்களத்தின் பெயரை பயன்படுத்தி இணையவழி மோசடி

ஆகஸ்ட் 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பாறையில் 15 வயது சிறுவன் யானை தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி

அக்டோபர் 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube