அநுராதபுரம், வெவெல்கெட்டிய – பிஹினியாகொல்லேவ பகுதியில் ஐந்து வயதுடைய யானைக்குட்டி ஒன்று உடல்நலக் குறைவுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பண்டுலகம வனவிலங்கு கால்நடை மருத்துவப் பிரிவின் கால்நடை மருத்துவர்களான சந்தன ஜயசிங்க, உதெஷிகா மதுவந்தி உள்ளிட்ட குழுவினர் யானைக்குட்டிக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர்.
யானைக்குட்டியின் உடல்நிலை தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
