மலைநாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில் கண்டி மாவட்டத்தில் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர் வற்றிய நிலையில் காணப்படுகிறது.
கண்டி மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்தபோதும் விக்டோரியா நீரேந்து பகுதிகளுக்கு போதியளவு மழைவீழ்ச்சி கிடைக்காமையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
