பொலிவுட் நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடித்ததன் காரணமாகவே நடிகர் டைகர் ஷெராஃப்பை இலக்கு வைத்ததாக பிஷ்னாய் குழு தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள், பொலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
டைகர் ஷெராஃப் சிற்றூந்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, இரு இளைஞர்கள் அவரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், சல்மான் கானுடன் தொடர்புடைய நடிகர்களின் பாதுகாப்பு குறித்தும் சமூக வலைதளங்களில் கவலைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் புதிய திரைப்படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், நயன்தாராவின் பாதுகாப்பு குறித்தும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இதேவேளை, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கான் நடிக்கும் புதிய திரைப்படம் அடுத்த ஆண்டு ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
