இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சிற்றுண்டிகள் மற்றும் பராட்டா ஆகியவற்றின் விலைகளையும் உயர்த்த உணவக உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
இன்று (21) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அகில இலங்கை உணவகங்கள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இதனைத் தெரிவித்துள்ளார்.
பணிப்பாளர் சபைக் கூட்டத்தின் பின்னர், விலை அதிகரிப்பு தொடர்பான துல்லியமான விபரங்கள் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
