மத்திய, சபரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (21) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (22) அதிகாலை 1.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாகாணங்களின் பல பகுதிகளில் பலத்த மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் திறந்தவெளிகள், உயரமான மரங்கள் மற்றும் பாதுகாப்பற்ற இடங்களில் தங்குவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
