Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரிக்கை

#சர்வதேசமன்னிப்புச்சபை #மன்னிப்புச்சபைஎச்சரிக்கை #இலங்கைசெய்திகள் #மனிதஉரிமைகள் #மனிதஉரிமைமீறல் #சர்வதேசசெய்திகள் #தமிழ்ச்செய்திகள் #இன்றையசெய்திகள் #உலகசெய்திகள் #AmnestyInternational #HumanRights #SriLankaNews #TamilNews #BreakingNews #InternationalNews

அக்டோபர் 22, 2026
படிக்க 2 நிமிடங்கள்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை அரசின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது துஷ்பிரயோகங்களுக்குப் பரந்த வாய்ப்பளிப்பதுடன், மனித உரிமைகளுக்குக் கடுமையான அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்துவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தனது புதிய சட்டப் பகுப்பாய்வில் சர்வதேச மன்னிப்புச் சபை இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்பட்ட உத்தேச சட்ட மூலத:துடன் ஒப்பிடுகையில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டபோதிலும், ‘அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்’, பயங்கரவாதம் குறித்த தெளிவற்ற மற்றும் மிகப்பரந்த வரைவிலக்கணத்தையே இன்னமும் கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

அடக்குமுறை நிறைந்ததும் நீண்டகாலமாக நடைமுறையிலுள்ளதுமான பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக இந்த புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இது தன்னிச்சையான விளக்கங்களுக்கும்; மாற்றுக் கருத்துக்கள், போராட்டங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் செயற்பாடுகளைக் குற்றமயமாக்குவதற்கும் வழிவகுக்கும் என சர்வதேச மன்னிப்புச்சசபை சுட்டிக்காட்டியுள்ளது.

அக்டோபர் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம், இலங்கையின் அரசியலமைப்பிற்கு இணங்குபவையாக உள்ளதா என்பதைப் பரிசீலிப்பதற்காக தற்போது உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தின் அடிப்படையில், எதிர்வரும் வாரங்களில் நாடாளுமன்றில் இந்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.

“அரசாங்கத்தின் விமர்சகர்கள், மாற்றுக் கருத்துள்ளவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகாரிகளால் பலமுறை ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் மிகக் கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிராந்திய பணிப்பாளர் ஸ்மிருதி சிங் தெரிவித்துள்ளார்.

புதிய சட்டமூலமானது இத்தகைய அடக்குமுறை மரபிலிருந்து விடுபட வேண்டுமே தவிர, மாற்றுக் கருத்துக்களை நசுக்குவதற்கு அதிகாரிகளுக்கு புதிய கருவிகளை வழங்குவதாக அமையக் கூடாது” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“இவ்வாறான சட்டங்களை துஷ்பிரயோகம் செய்த இலங்கையின் வரலாற்றைக் கருத்திற் கொண்டு, வலுவான மற்றும் நடைமுறைப்படுத்தக்கூடிய பாதுகாப்பு வழிமுறைகள் மிகவும் அவசியமானவை என தெரிவித்துள்ளார். எனினும், அவை இந்தச் சட்டமூலத்தில் போதியளவு சேர்க்கப்படவில்லை என்பது தீவிர மனித உரிமை கரிசனைகளை எழுப்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்திற்கான பரந்த வரைவிலக்கணத்திற்கு மேலதிகமாக, குற்றச்சாட்டு எதுவுமின்றி ஒரு வருடம் வரையிலும், வழக்கு விசாரணைக்கு முந்தைய காலப்பகுதியில் மேலும் ஒரு வருடம் வரையிலும் தடுப்புக் காவலில் வைக்க இச்சட்டமூலம் அனுமதி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

இது தன்னிச்சையான தடுப்புக் காவலில் இருந்து விடுபடுவதற்கான உரிமை, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் குற்றமற்றவர் என்ற அனுமானம் மற்றும் நியாயமான காலத்திற்குள் வழக்கு விசாரணையைப் பெறுவதற்கான உரிமை ஆகியவற்றை மீறுவதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அரசு வழக்கை விசாரணைக்குக் கொண்டுவரத் தாமதிக்கும் வரை எவரும் பல ஆண்டுகள் சிறையில் இருக்கக் கூடாது,” என்று ஸ்மிருதி சிங் மேலும் கூறியுள்ளார்.

“இந்தச் சட்டமூலத்தைத் திரும்பப் பெற்று, சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் தரநிலைகளுக்கு ஏற்ப சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு இலங்கை நாடாளுமன்றத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். அதுவரை பயங்கரவாதத் தடைச் சட்டம் மீண்டும் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலி!

ஆகஸ்ட் 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் சட்ட விரோத போதைப்பொருள் விற்பனை ஒழிக்குமாறு கோரி – ஆர்ப்பாட்டம்

அக்டோபர் 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய ஏற்றுமதி திட்டம்: இலங்கை சுங்கத்தின் பங்களிப்பு குறித்து கலந்துரையாடல்

ஜூன் 17, 2026
இலங்கைஎங்கள் ஊர்

ஆடி வேல் ரத பவனி ஜனாதிபதி செயலகத்தில் சிறப்பு வழிபாடு!

ஜூலை 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube