ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மூர் தோட்ட நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில், இன்று (22) ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்த்தேக்கத்தில் சடலம் மிதப்பதைக் கண்ட தோட்டத் தொழிலாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
மேலும், நீர்த்தேக்கத்திற்கு அருகில் ஒரு ஜோடி காலணிகள், குடை மற்றும் பணப்பை ஆகியவற்றையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
