களனி பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து ஒரு கிலோ கிராம் 45 கிராம் ஐஸ், ஒரு கிலோகிராம் 86 கிராம் ஹெரோயின், ஒரு மின்னணு தராசு, போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் ரூ. 8,50,000 மற்றும் ஒரு கைத்தொலைபேசி ஆகியவை கைப்றப்பட்டன.
கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 46 வயதான அந்த சந்தேக நபர், மாளிககந்த நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
