இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகளில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது செயலாளர் ஆகியோரைப் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், பொஸ்பேட் ஏற்றுமதி உரிமங்களை வழங்குவதற்காக மூன்று தனியார் நிறுவனங்களிடமிருந்து 81 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் மற்றொரு வழக்கில், அவர்களது பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இருவரையும் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பிணையில் விடுவிக்கப்பட்ட நான்கு வழக்குகளிலும் அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
