Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

2028ஆம் ஆண்டுக்குள் 3 பில்லியன் டொலர்களைத் திரட்ட முடியும் என IMF கணிப்பு!

அக்டோபர் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2028ஆம் ஆண்டளவில் சர்வதேச இறைமைப் பிணைமுறிகளை வெளியிடுவதன் மூலம் இலங்கையால் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்ட முடியும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) கணித்துள்ளது.

எனினும், சர்வதேச சந்தையில் பிணைமுறிகளை வெளியிடுவது தொடர்பான இறுதி முடிவை இலங்கை அரசாங்கமே எடுக்கும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

IMF இன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வு அறிக்கைகளின்படி, 2026ஆம் ஆண்டில் பிணைமுறிகள் மூலம் நிதி திரட்டுவது கணிக்கப்படவில்லை. இருப்பினும், 2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகளில் தலா 1.5 பில்லியன் டொலர்களைத் திரட்ட முடியும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகைகள் IMF முன்வைத்த கணிப்புகளே தவிர, இலங்கை அரசாங்கத்தின் சொந்த மதிப்பீடுகள் அல்ல எனப் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் பொருளாதார நிலைமையை மதிப்பீடு செய்த பின்னரே பிணைமுறிகளை வெளியிடுவது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், 2026 மே மாத இறுதியில் நிலுவையில் இருக்கும் நாணயப் பரிமாற்ற ஒப்பந்தங்களின் மொத்தப் பெறுமதி 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 1.8 பில்லியன் டொலர்கள் சர்வதேச ரீதியிலும், 2.3 பில்லியன் டொலர்கள் உள்நாட்டிலும் உள்ளன.

மேலும், அரசாங்கத்தின் கடன் முகாமைத்துவத்தில் உள்ள அபாயங்களைக் குறைப்பதற்காக அரச கடன் முகாமைத்துவ அலுவலகம் (PDMO) சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், சந்தை நிலைமைகளையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் காணிகளை இழந்த மக்கள் போராட்டம்

ஆகஸ்ட் 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்புக்கான போக்குவரத்து கட்டுப்பாடு

செப்டம்பர் 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு!

ஜூன் 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்பு போராட்டம் அர்த்தமற்றது – நளிந்த ஜயதிஸ்ஸ!

ஜூன் 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube