சிறையில் அடைக்கப்படும் பௌத்த பிக்குகளின் காவியுடைகளைக் களைவது மற்றும் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும்போது காவியுடை அணிவது தொடர்பான நடைமுறைகளை உள்ளடக்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, சிறையில் தடுத்து வைக்கப்படும் பௌத்த பிக்குகளின் ஆடை தொடர்பான நடைமுறைகள் மற்றும் அவர்களைச் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும் சந்தர்ப்பங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த ஏற்பாடுகள் இந்த வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
