Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினை: ஜனாதிபதியுடன் சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை!

அக்டோபர் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கு நேரம் ஒதுக்குமாறு கோரி இலங்கைத் தமிழரசுக் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.

கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் நிலங்களில் தொடர்ச்சியாக இடம்பெறுவதாகக் கூறப்படும் ஆக்கிரமிப்புகள் மற்றும் அப்பகுதிக்குச் செல்வதில் உள்ள சிரமங்கள் காரணமாகப் பால் பண்ணையாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக மாவட்ட மட்டத்திலும் நாடாளுமன்றத்தின் ஊடாகவும் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இதுவரை திருப்திகரமான தீர்வு எட்டப்படவில்லை எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், குறித்த விவகாரத்தில் ஜனாதிபதியின் நேரடித் தலையீடு அவசியம் எனத் தமிழரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மேலும், பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கைகளை முன்னெடுப்பது மற்றும் நீண்டகால நிலையான தீர்வை எட்டுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழரசுக் கட்சிப் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு விரைவில் நேரம் ஒதுக்குமாறும் கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

உலகக் கிண்ணப் பரிசளிப்பு விழா – ட்ரம்ப் பங்கேற்பு

ஜூலை 19, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கொலம்பியாவில் தங்கச் சுரங்கம் இடிந்து 6 பேர் பலி; 15 பேர் மாயம்!

அக்டோபர் 20, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

Google Trending இல் விஜய்!

மே 9, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

தாய்லாந்தில் கன மழை – வெள்ளத்தில் மூழ்கியது பேங்கொக்

செப்டம்பர் 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube