Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்கள் குறித்து அரசாங்கம் அக்கறை செலுத்தவில்லை – சீலரத்ன தேரர்

அக்டோபர் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பௌத்த சாசனத்தைப் பாதுகாக்கக் கோரி கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்கள் தொடர்பில், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அக்கறை செலுத்தவில்லை என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜனசெத பெரமுன கட்சியின் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போதைய ஜனாதிபதி நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதியாக இருப்பதால், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என அவர் தெரிவித்தார்.

தாம் நீதிமன்றத்தையும் நீதித்துறையையும் மதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், பௌத்த சாசனத்தைப் பாதுகாக்கக் கோரி போராடும் தேரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், குறித்த விவகாரத்தில் ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு தீர்வொன்றை வழங்கியிருக்கலாம் எனத் தெரிவித்த சீலரத்ன தேரர், ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையில், அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பிலும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார். மக்களின் கருத்துக்களைக் கேட்டறியாமல் சட்டங்களை நிறைவேற்றுவது பொருத்தமானதல்ல எனக் குறிப்பிட்ட அவர், மக்களின் உரிமைகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மக்கள் வழங்கிய ஆணை நிரந்தரமானதல்ல என்பதை அரசாங்கம் நினைவில் கொண்டு, பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கும் நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

புத்தளம்- மாதம்பையில் டிராக்டர் விபத்து: இளைஞர் பலி!

ஆகஸ்ட் 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்று இலங்கையின் பல பகுதிகளில் மழை – சில பகுதிகளுக்கு வெப்பமான காலநிலை எச்சரிக்கை

அக்டோபர் 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நேபாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

ஆகஸ்ட் 28, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சமூக ஊடக வலைத்தளங்கள் திடீர் முடக்கம்!

ஜூலை 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube