களுவாஞ்சிக்குடி பொலிஸாரின் தகவலின்படி, மீனவர்கள் வழங்கிய இரகசியத் தகவலையடுத்து, மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) மாலை குறித்த வீட்டில் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த மூன்று சுருக்கு வலைகளும் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றின் உரிமையாளர் எனக் கூறப்படும் மீனவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நீண்டகாலமாகச் சட்டவிரோத சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
