Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டிக்கோயா பாடசாலையில் ஆவணங்களுக்குத் தீ வைப்பு! – பொலிஸார் விசாரணை!

#டிக்கோயா #ஹொன்சி_தமிழ்_மகா_வித்தியாலயம் #பாடசாலை #ஆவணங்களுக்குத்_தீவைப்பு #நோர்வூட்_பொலிஸ் #பொலிஸ்_விசாரணை #ஹட்டன் #மலையகசெய்திகள் #இலங்கைசெய்திகள் #BreakingNews #SriLankaNews #Hatton #Norwood #SchoolNews #TamilNews

அக்டோபர் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹட்டன், டிக்கோயா ஹொன்சி தமிழ் மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் புத்தகங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பாடசாலையின் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அலுமாரிகளை உடைத்து, அவற்றுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் புத்தகங்கள், பிறப்புச் சான்றிதழ்கள், வினாத்தாள்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம்  கடந்த 24ஆம் திகதி  பிற்பகல் சுமார் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மண்டபத்திலிருந்து புகை மற்றும் தீ எழுவதைக் கவனித்த அதிபர் உடனடியாகச் செயற்பட்டு தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் தீ மேலும் பரவுவது தடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மாணவர்களின் கல்வி தொடர்பான ஆவணங்கள் மற்றும் முக்கிய சான்றிதழ்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

எல்நினோவினால் அதிகரிக்கும் பணவீக்கம்

ஆகஸ்ட் 17, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஹார்முஸ் ஜலசந்தியில் சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

ஜூன் 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சபாநாயகரை சந்தித்தார் ரஷ்ய தூதுவர் லெவான் எஸ்.டிகேரியன்

ஜூலை 15, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சீனாவின் திபெத்தில் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

அக்டோபர் 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube