நாடு முழுவதும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, தெதுறு ஓயா, ராஜாங்கனை, குக்குலே கங்கை மற்றும் கலா வாவி ஆகிய நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தெதுறு ஓயாவின் எட்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. குக்குலே கங்கை மற்றும் கலா வாவி நீர்த்தேக்கங்களிலிருந்தும் நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால், குறித்த நீர்த்தேக்கங்களின் கீழ்ப்பகுதிகள் மற்றும் ஆற்றங்கரையோர தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
