Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஜெர்மனியில் கப்பல்கள் மோதல்: அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியீடு!

அக்டோபர் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஜெர்மனியின் பிரெமர்ஹாவன் (Bremerhaven) துறைமுகத்தில், TUI Cruises நிறுவனத்துக்குச் சொந்தமான Mein Schiff 3 சொகுசுக் கப்பல், துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த MSC Victorine கொள்கலன் கப்பலுடன் மோதிய தருணத்தைப் பதிவு செய்த புதிய காணொளி வெளியாகியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, பலத்த காற்று காரணமாக சொகுசுக் கப்பல் பக்கவாட்டில் நகர்ந்ததாகவும், அதனைக் கட்டுப்படுத்த இழுவைப் படகுகள் (Tugboats) உதவியபோதும் மோதலைத் தவிர்க்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலில் சொகுசுக் கப்பலின் பல உயிர்காக்கும் படகுகள் சேதமடைந்துள்ளன. கொள்கலன் கப்பலுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தின்போது சொகுசுக் கப்பலில் 2,428 பயணிகளும் 922 பணியாளர்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், இதுவரை எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை.

மோதலைத் தொடர்ந்து Mein Schiff 3 மீண்டும் துறைமுகத்திற்குத் திரும்பியுள்ளது. கப்பலுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பலத்த காற்று மற்றும் மோசமான வானிலை இந்தச் சம்பவத்துக்குப் பங்களித்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படும் நிலையில், விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து ஜெர்மன் நீர்ப்போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

சுகாதாரத் துறையில் நவீன தொழில்நுட்பக் கருவிகளை அறிமுகப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்

செப்டம்பர் 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் அரசியல் கருத்தரங்கு !

ஜூன் 8, 2026
உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே சமாதான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது என ட்ரம்ப் அறிவிப்பு – ஈரான் மறுப்பு!

ஜூன் 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புற்றுநோய்க்கான 40 வகையான மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு

செப்டம்பர் 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube