ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் பாரிய இராணுவத் தாக்குதலை முன்னெடுக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வந்த நிலையில், இன்று ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், ஈரானுடன் ஓர் உடன்பாட்டை எட்டுவதா அல்லது இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதா என்பது குறித்து தீர்மானிக்க வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், எதிர்காலத்தில் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பை ட்ரம்ப் முழுமையாக நிராகரிக்கவில்லை. இதனால் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது.
ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் ஈரான்–அமெரிக்க மோதல் சர்வதேச எண்ணெய் விநியோகத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கட்டார் உள்ளிட்ட நாடுகள் இரு தரப்பினருக்கும் இடையில் பதற்றத்தைத் தணித்து, பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன
