Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மேசைப்பந்தாட்டத்தில் இலங்கைச் சிறுவன் தாவி சமரவீரவுக்கு ஐந்தாவது சம்பியன் பட்டம்!

அக்டோபர் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சர்வதேச மேசைப்பந்தாட்டப் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி வரும் இலங்கையின் 11 வயதுச் சிறுவன் தாவி சமரவீர, இவ்வாண்டு 11 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பிரிவில் தனது ஐந்தாவது சம்பியன் பட்டத்தை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இத்தாலியின் லிஞானோ சபியாடோரோவில் அமைந்துள்ள பெல்லா இத்தாலியா WTT விலேஜ் ஸ்போர்ட்ஸ் ஹோலில் நடைபெற்ற உலக மேசைப்பந்தாட்ட இளையோர் தொடர் – லிஞானோ 2026 போட்டியிலேயே அவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

இத்தொடரில் தாவி விளையாடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன், எந்தவொரு போட்டியிலும் ஒரு செட்டைக்கூட இழக்காமல் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இறுதிப் போட்டியில் அபார வெற்றி

இறுதிப் போட்டியில் ஹொங்கொங் வீரர் ஹுய் சுன் ஷுன்னை எதிர்கொண்ட தாவி சமரவீர, 11–2, 11–2, 11–6 என்ற புள்ளிகள் கணக்கில் தொடர்ந்து மூன்று செட்களையும் கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார்.

இதற்கு முன்னர் முதலாவது குழுவில் இடம்பெற்ற அவர், ஆரம்பப் போட்டியில் இத்தாலி வீரர் உம்பேர்ட்டோ பஃபிஜியை 11–5, 11–6, 11–6 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார்.

இரண்டாவது சுற்றில் மற்றொரு இத்தாலி வீரரான லெனார்டோ சென்டியை 11–9, 11–6, 11–1 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிகொண்டு காலிறுதிக்குத் தகுதி பெற்றார்.

காலிறுதியில் ஜியாகோமோ ரீவாவை 11–5, 11–6, 11–6 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதியில் அலெஸ்ஸாண்ட்ரோ ரிஸ்ஸோவை எதிர்கொண்ட தாவி, 11–7, 11–1, 11–4 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

இவ்வாறு தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளிலும் ஒரு செட்டைக்கூட இழக்காமல் வெற்றிபெற்று ஐந்தாவது சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய தாவி சமரவீரவின் சாதனை, இலங்கை மேசைப்பந்தாட்டத் துறைக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தொழிலாளர்களின் கட்டாய உழைப்பு இறக்குமதி பொருட்களுக்கு தடை!

ஜூலை 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதமர் – பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளரை நேற்று சந்தித்தார்!

மே 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு யூனியன் வங்கிக் கிளையில் அதிகாலை தீ விபத்து!

மே 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல்நினோ மாற்றத்தினால் வேலை இழந்தோருக்கு நிவாரணமளிக்கும் விசேட திட்டம்

செப்டம்பர் 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube