Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையை விட்டு விலகும் காற்றுச் சுழற்சி: இன்று முதல் வானிலையில் மாற்றம்!

அக்டோபர் 27, 2026
படிக்க 2 நிமிடங்கள்

இலங்கையைப் பாதித்து வந்த காற்றுச் சுழற்சி வடகிழக்குத் திசையில் நகர்ந்து நாட்டின் செல்வாக்குப் பகுதியிலிருந்து படிப்படியாக விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் நிலவிய கனமழையுடனான சீரற்ற வானிலை இன்று (27) அதிகாலை முதல் படிப்படியாக வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Contents
இன்று வடக்கு மாகாணத்தில் மழை குறையும்தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் மழைக்கு வாய்ப்புஅர்னாப் புயலால் நாளை மீண்டும் மழை அதிகரிக்கலாம்வடக்கு, கிழக்குக் கடற்பகுதிகளில் எச்சரிக்கை

திருகோணமலையிலிருந்து வடகிழக்குத் திசையில் சுமார் 270 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் காற்றுச் சுழற்சி, இன்று இரவு மேலும் வடகிழக்குத் திசையில் நகரும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வடக்கு மாகாணத்தில் மழை குறையும்

இன்று (27) அதிகாலை முதல் வடக்கு மாகாணம் முழுவதும் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும். எனினும், சில இடங்களில் மிதமான தூறல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் இன்று நண்பகலுக்குப் பின்னர் சற்றுக் கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக, திருகோணமலை மாவட்டத்தின் இறக்கண்டி முதல் தோப்பூர் வரையான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் அம்பாறை, உகன மற்றும் நமல்ஓயா பகுதிகளிலும் சற்றுக் கனமழை பெய்யக்கூடும். மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் மழைக்கு வாய்ப்பு

தென் மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று (27) மிதமானது முதல் சற்றுக் கனமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, காலி மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் இன்று இரவு முதல் நாளை (28) அதிகாலை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தின் சில பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். களுத்துறை மாவட்டத்தில் சற்றுக் கனமழை பெய்வதற்கான வாய்ப்பும் காணப்படுகிறது.

அர்னாப் புயலால் நாளை மீண்டும் மழை அதிகரிக்கலாம்

மத்திய வங்காள விரிகுடாவில் நிலவும் தீவிரமான அர்னாப் புயல், நாளை (28) அதிகாலை அல்லது காலைப் பொழுதில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் காக்கிநாடாவுக்கு அண்மையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் கரையைக் கடக்கும் காலப்பகுதியில் அரபிக்கடலில் இருந்து ஈரப்பதம் நிறைந்த காற்று புத்தளம் முதல் மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளினூடாக இலங்கைக்குள் நுழையக்கூடும். இதன் காரணமாக, நாளை (28) நாட்டின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் சற்றுக் கனமழை பெய்யக்கூடும்.

மேலும், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, கம்பஹா, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் நாளை சற்றுக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்குக் கடற்பகுதிகளில் எச்சரிக்கை

நாளை (28) இரவு 10 மணி வரை வடக்கு மற்றும் கிழக்குக் கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்து, வானிலை அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்: நாகமுத்து பிரதீபராஜா

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்களுக்கு பேராபத்து!

செப்டம்பர் 29, 2026
முக்கியச் செய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இலக்கம் மோசடி இலக்கங்களின் பட்டியலில் இணைப்பு!

மே 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சரண குணவர்தனவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை!

அக்டோபர் 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – இருவர் காயம்

ஆகஸ்ட் 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube