ரஷ்யா மற்றும் உக்ரைன் தரப்புகள், ரஷ்யக் கட்டுப்பாட்டிலுள்ள ஓலேஷ்கி நகரில் ஒக்டோபர் 27ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் பொதுமக்களைப் பாதுகாப்பான வழித்தடங்கள் ஊடாக வெளியேற்றுவதற்கும் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனுடன், நவம்பர் முதல் பாதியில் அமெரிக்காவின் பங்கேற்புடன் தொழில்நுட்ப மட்டத்திலான அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் நடத்துவது குறித்தும் இரு தரப்புகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
எனினும், நீண்டகால அமைதி உடன்படிக்கை தொடர்பான முக்கிய கருத்து வேறுபாடுகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.
