Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

அக்டோபர் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சீரற்ற வானிலை காரணமாக இலங்கையின் பல மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிவித்துள்ளது.

Contents
மட்டம் 2 – அவதான நிலை (செம்மஞ்சள்)மட்டம் 1 – எச்சரிக்கை நிலை (மஞ்சள்)பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

இந்த எச்சரிக்கை இன்று (28) மாலை 4 மணி முதல் நாளை (29) மாலை 4 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டம் 2 – அவதான நிலை (செம்மஞ்சள்)

கீழ்வரும் பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • கம்பஹா மாவட்டம்: அத்தனகல்ல
  • களுத்துறை மாவட்டம்: புளத்சிங்ஹல, தொடங்கொட
  • கேகாலை மாவட்டம்: மாவனெல்ல, அரநாயக்க
  • நுவரெலியா மாவட்டம்: நோர்வூட், அம்பகமுவ கோரளை
  • இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி, ஓபநாயக்க, குருவிட்ட, அயகம, எலபாத, பெல்மடுல்ல

மட்டம் 1 – எச்சரிக்கை நிலை (மஞ்சள்)

பின்வரும் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • கொழும்பு மாவட்டம்: சீத்தாவக, பாதுக்கை
  • காலி மாவட்டம்: நெலுவ, எல்பிட்டிய, தவலம, நியாகம, கரந்தெனிய
  • களுத்துறை மாவட்டம்: பேருவளை, மில்லனிய, அகலவத்தை, மதுராவல, ஹொணை, வலல்லாவிட்ட, பாலிந்தநுவர, மதுகம, இங்கிரிய
  • கண்டி மாவட்டம்: உடபலாத, யட்டிநுவர, பஸ்பாகே கோரளை, உடுநுவர, கங்க இஹல கோரளை
  • கேகாலை மாவட்டம்: கலிகமுவ, வரகாபொல, ருவன்வெல்ல, யட்டியாந்தோட்டை, ரம்புக்கனை, கேகாலை, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட, தெரணியாகலை
  • குருநாகல் மாவட்டம்: குருநாகல்
  • மாத்தறை மாவட்டம்: கொடபொல, பிடபெத்தர
  • நுவரெலியா மாவட்டம்: கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு
  • இரத்தினபுரி மாவட்டம்: கலவானை, நிவித்திகலை, கிரியெல்ல, கொடகவெல, எஹெலியாகொடை, பலங்கொடை

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்போர் வானிலை நிலவரம் மற்றும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து அவதானிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மண்ணில் வெடிப்புகள் ஏற்படுதல், பாறைகள் சரிந்து விழுதல், நிலம் தாழிறங்குதல் அல்லது வழக்கத்திற்கு மாறாக நீர்வரத்து அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை தொடர்ந்து நிலவக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முல்லைத்தீவில் காட்டுயானைகள் அட்டகாசம் – வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் களவிஜயம்

அக்டோபர் 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீடொன்றுக்கு முன்பாக கைக்குண்டு ஒன்று மீட்பு

ஆகஸ்ட் 23, 2026
தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

உலகளாவிய இணையத்தளங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்!

அக்டோபர் 22, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கொங்கோ, உகண்டாவில் தீவிரமடையும் எபோலா பரவல்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

மே 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube