இந்தியாவின் விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தித் துறையை மேம்படுத்தவும், சர்வதேச சந்தையில் அதன் பங்களிப்பை அதிகரிக்கவும் ரூ.18.56 பில்லியன் (சுமார் 195 மில்லியன் அமெரிக்க டொலர்) திட்டத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
2026 முதல் 2033-34 ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் முதலீடுகளை ஈர்த்தல், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், உற்பத்தித் தரத்தை உயர்த்துதல் மற்றும் ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவை நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைய, விளையாட்டுப் பொருட்கள் உற்பத்திக்கான பிரத்யேக வலயங்களை உருவாக்குதல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவித்தல், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், முதலீடு மற்றும் உற்பத்தி ஊக்குவிப்புகளுக்காக ரூ.11.3 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச விளையாட்டு சம்மேளனங்களின் சான்றிதழ்களைப் பெறுவதற்கும் புதுப்பிப்பதற்கும் ரூ.1.05 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, நவீன உற்பத்தித் தொழில்நுட்பங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையுடன் இணைந்த திறன் பயிற்சிகளுக்கும் இந்தத் திட்டம் ஆதரவளிக்கவுள்ளது.
