அகமதாபாத்தில் நடைபெற்று வரும் முதலாவது காமன்வெல்த் கபடி சம்பியன்ஷிப் 2026 தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை ஆண்கள் கபடி அணி தகுதி பெற்றுள்ளது.
நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கென்ய அணியை 28–24 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பைப் பெற்றது.
இதன்படி, சம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
